குவாலியர்

காத்மா காந்தியை கொன்ற கோட்சேவை தேசியவாதி என கூறுபவர்கள் இந்துக்கள் கிடையாது என சங்கராச்சாரியர் ஸ்வரூபானந்த் சரஸ்வதி கூறி உள்ளார்.

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை பல இந்து அமைப்புக்கள் புகழ்ந்து வருவது வழக்கமாகி உள்ளது. கடந்த 2017 ஆம் வருடம் இந்து மகாசபையின் மத்தியப் பிரதேச மாநிலப் பிரிவு கோட்சேவுக்கு ஒரு சிலையை தனது அலுவலகத்தில் அமைத்தது. அது கொட்சே கோவிலின் உதாரணம் என தெரிவித்து பூஜைகளும் நடத்தியது

பலரும் இது குறித்து புகார் அளித்ததால் காவல்துறையினர் அந்த சிலையை கைப்பற்றி பூஜை செய்த சபையினர் மீது வழக்கு பதிந்தனர்.

சமீபத்திய மக்களவை தேர்தலில் போபால் தொகுதியில் போட்டியிட்ட சாத்வி பிரக்ஞா தாகுர் கொட்சேவை ஒரு தேசியவாதி என அழைத்தார். இது அனைத்துக்  கட்சிகளிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் சாத்விக்கு கண்டனம் தெரிவித்தனர். அதன் பிறகு இதற்காக சாத்வி மன்னிப்பு கோரினார்.

குவாலியர் நகருக்கு வந்துள்ள சங்கராசாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி செய்தியாளர்களிடம், “காந்தி எந்த ஒரு ஆயுதமும் எடுக்காமல் போராட்டம் நடத்தியவர் ஆவார். அவர் தனது கொள்கைகளை தவிர் அவேறு எந்த ஆயுதமும் எடுத்ததில்லை. இந்து மதத்தில் வன்முறை கூடாது என சொல்லியதை அவர் கடைபிடித்துள்ளார்.

அப்படிப்பட்ட காந்தியின் மீது வன்முறையாக துப்பாக்கி சூடு நடத்தி அவரை கோட்சே கொன்றுள்ளார். அப்படி இருக்க பல இந்துத்வ அமைப்பை சேர்ந்தவர்கள் அவரை தேசிய வாதி என புகழ்கின்றனர். ஆயுதம் மற்றும் வன்முறையை கையில் எடுத்த கோட்சேவை புகழ்பவர்கள் இந்துக்கள் அல்ல” என தெரிவித்துள்ளார்.