சென்னை: பெண்களுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கி வரும் திமுக அரசு, வரும் சட்டத்தை தேர்தலை கவனத்தில் கொணடு வரும் 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக  வழங்கப்பட்ட மனுக்களின் ஆய்வு முடிவு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட பெண்களுக்கு வரும் 12ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. அதற்கான இறுதிக்கட்ட பணிகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் முக்கியமான திட்டமாக மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தகுதியான மகளிருக்கு மட்டுமே ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் ரூபாய் 1.15 கோடி மகளிர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

1.63 கோடி பெண்கள் விண்ணப்பித்த சூழலில், ரூபாய் 1.15 கோடி மகளிர்களுக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. உரிமைத் தொகை பெற முடியாத பல பெண்களும் தாங்களும் தகுதியானவர்கள் என்பதால் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில், விருதுநகர் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 12ம் தேதி முதல் கூடுதலாக விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஆட்சியை தக்கவைக்க திமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளின் வெற்றியையே தேர்தல் பரப்புரையில் முக்கிய வாதமாக எடுத்து வைக்க திமுக முடிவு செய்துள்ளது.  அதற்காக விடுப்ப  பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே நடைபெற்று வந்த நிலையில் வரும்   12ம் தேதி விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட  இருப்பதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.