கஞ்ச்ரபரா:

மேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் வங்காள மொழியை பேச கற்க வேண்டும் என அம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.


கஞ்ச்ரபராவில் நடந்த கட்சி பேரணியில் பேசிய அவர், மேற்கு வங்கத்தில் டாக்டர்கள் போராட்டத்தை வெளியிலிருந்து தூண்டி விடுகின்றனர்.  மருத்துவமனைக்கு வெளியே சிலர் கோஷமிட்டதைப் பார்த்தேன்.

வங்காளிகளையும், சிறுபான்மையினத்தவரையும் குறி வைத்து பாஜக செயல்படுகிறது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் தில்லு முல்லு நடந்துள்ளது.
தேர்தல்களில் வாக்குச் சீட்டு முறையையே திரும்ப கொண்டு வரவேண்டும்.

சில தொகுதிகளை இயந்திரத்தில் புரோகிராம் செய்து பாஜக வெற்றி பெற்றுள்ளது.

வங்காளிகளையும் சிறுபான்மையினத்தவரையும் அவர்கள் தொடர்ந்து அடிப்பதை பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம்.

வன்முறையில் ஈடுபடும் குண்டர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள்.
மேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் யாராக இருந்தாலும், வங்காள மொழியை பேச கற்க வேண்டும் என்றார்.