இரட்டை இலை சின்னத்தைப் பெற டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நான்கு நாள் விசாரணைக்குப் பிறகு நேற்று அவரை  கைது செய்தனர்.

அவருடன் மேலும் சிலரை டில்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவர்களில் முக்கியமானவர்  தினகரன் நண்பர் மல்லிகார்ஜூனா. தினகரனுடன்  சேர்ந்து இவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. தற்போத  தினகரனுடன் இவரும் அடைக்கப்பட்டுள்ளார்.

அடுத்து வழக்கறிஞர் குமார்.  ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் இவர்.

“இவர் மூலம்தான் தினகரன், பணம் ககைமாறியது” என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே இவரும் விசாரணையில் இருக்கிறார்.

இடைத்தரகர் சுகேஷிடம் விசாரணை  தொடர்வது அனைவரும் அறிந்த விசயம். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக  ஏப்.,28ம் தேதி வரை காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் இவர், தினகரனுடனான பேரத்தின் போது, தான் சந்தித்து பேசிய, ஷா பைஸல் என்பவரை, சுகேஷ் சந்தர் அடையாளம் கண்டு உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து, பைஸலிடமும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த இருக்கிறார்கள்.  இதற்காக பைஸல் இன்று டில்லி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆஜராவார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.