தூத்துக்குடி பெரியசாமி மரணம்: மு.க. ஸ்டாலின் மரியாதை

Must read

சென்னை:

றைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், கலைஞரின் முரட்டு பக்தனுமான என்.பெரியசாமி உடலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்.

உடல்நலமில்லாமல் சென்னை  தனியார் மருத்துவமனையில் பெரியசாமி, சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார்.

அவரது மரணத்தை தொடர்ந்து திமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. 3 நாட்கள் கழக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாகவும் திமுக தலைமைக்கழகம் அறிவித்து உள்ளது.

இதனைத் தொடர்ந்து ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள என். பெரியசாமியின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் சென்றனர்.

ஏற்கனவே மறைந்த பெரியசாமியின் உடலுக்கு ஸ்டாலினின் மனைவி துர்கா, சகோதரி செல்வி ஆகியோரும்  அஞ்சலி செலுத்தினார்கள்.

திமுக மூத்த தலைவர் டி ஆர் பாலு நேரில் சென்று பெரியசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

More articles

Latest article