சென்னை :

சென்னை எழும்பூரில் ரெயில் மறியலில் ஈடுபட்ட கனிமொழி, திருமாவளவன், ஜவாஹிருள்ள உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கண்டித்து சென்னை முழுவதும் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், மனித நேய மக்கள் கட்சி உள்பட கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை திமுக.வினர் கூட்டணி கட்சியினருடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக எம்.பி. கனிமொழி, திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து 700-க்கும் மேற்பட்டோர் போராட்டட்டில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.