சென்னை:
ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயரிழந்தனர்.
இதை கண்டித்து, சென்னையில், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தூத்துக்குடியில் நடைபெற்ற போலீசாரின் துப்பாக்கி சூடுக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழர் கலை இலக்கிய கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரபல இயக்குநர்கள் பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல், சசி, ராஜூ முருகன், நவீன், எழுத்தாளர் சல்மா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அவர்கள் தங்கள் கைகளில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.