பெங்களூருவில் உள்ள வேதாந்தா நிறுவனம்

பெங்களூரு:

தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தை சேர்ந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய ஈவு இரக்கமற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்நிலையில், பெங்களூருவில் உள்ள வேதாந்த குழுமத்துக்கு சொந்தமான ஸ்டீல் ஆலையை அங்குள்ள தொழிற்சங்க அமைப்புகள் இன்று மாலை  முற்றுகையிடப்போவதாக அறிவித்து உள்ளன.

இதுகுறித்து தெரிவித்த  ஏஐசிடியூ தொழிற்சங்கத்தின் கர்நாடக மாநில பொதுச் செயலாளர் பாலன்,  வேதாந்தா வின் கொள்ளைக்காக அடியாள் படையாக செயல்பட்டு 13 பேரைப் பச்சைப்படுகொலை செய்த கொடுஞ் செயலைக் கண்டித்து பெங்களூரில் வேதாந்தா நிறுவனத்தை முற்றுகையிட உள்ளோம் என்று கூறி உள்ளார்.

பெங்களூர் எம்ஜி ரோட்டில் உள்ள மேயோ ஹால் அருகே, வேதாந்தா நிறுவன கார்பொரேட் அலுவலகம் உள்ளது. அதை மதியம் 3 மணிக்கு முற்றுகையிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பெங்களூரில் உள்ள  வேதாந்தா குழம அலுவலகத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.