புதுடெல்லி:

ராகுல் காந்தியின் குறைந்தபட்ச வருவாய் ஈட்டும் திட்டத்துக்கு, பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் ஆங்குஷ் டியோடான் மற்றும் பிரெஞ்ச் பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கெட்டி ஆகியோர் உதவ உள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆங்குஷ் டியோடான்.

‘தி பிரிண்ட்’ இணையத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் அளித்த பேட்டியில், ஆட்சிக்கு வந்தால், குறைந்தபட்ச வருவாய் ஈட்டும் உத்தரவாதத் திட்டத்தை அமல்படுத்துவோம் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்தார்.

இதன்படி, வீட்டுக்கு ஒருவருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். இந்த திட்டம் குறித்து ஆராயுமாறு நோபல் பரிசு பெற்ற டியோடான் மற்றும் பிக்கெட்டி ஆகியோரை தொடர்பு கொண்டுள்ளோம்.
இருவரது புத்தகங்களை படித்து, அதில் ராகுல்காந்தி கவரப்பட்டதாலேயே, இத்திட்டத்துக்கு உதவ இருவரையும் அணுகியுள்ளோம்.

பிக்கெட்டி எழுதிய ‘கேபிடல் இன் த ட்வென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி’ என்ற புத்தகம், தொழில் புரட்சியும் வளமும் ஒரு சில பணக்கார குடும்பத்துக்கே சாதகமாக இருப்பதால் ஏற்படும் சமமற்ற சமுதாயத்தை பற்றி விளக்கியுள்ளது. இவர் நவீன மார்க்ஸ் என்று அழைக்கப்படுகிறார்.

இந்த புத்தகத்தின் அடிப்படையிலே பிரதமர் மோடியை , பணக்காரர், பணக்காரர்களாகின்றனர். ஏழை, ஏழையாகின்றனர் என்று தாக்குகிறார் ராகுல்காந்தி.

சமமற்ற வருவாய், வறுமை, சுகாதாரம், குறிப்பாக இந்தியர்கள் வாழ்வியல் குறித்தும் டியோட்டான் எழுதியுள்ளார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.