சென்னை

ந்த வருடமும் +2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கி, 25-ந் தேதியுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு பெற்றது. தேர்வை மொத்தம் 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவர்கள் எழுதினார்கள். இதில், மாணவிகள் 4 லட்சத்து 19 ஆயிரத்து 316 பேர், மாணவர்கள் 3 லட்சத்து 73 ஆயிரத்து 178 பேர் ஆவார்கள்.

இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.  தேர்வில் இருபாலரிலும் மொத்தம் தேர்ச்சி பெற்றவர்கள் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர். அதாவது, 95.03 சதவீதம் பேர் வெற்றி வெற்றுள்ளனர்.

இவர்களில் மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.70 (4 லட்சத்து 5 ஆயிரத்து 472 பேர்) ஆகும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 93.16 (3 லட்சத்து 47 ஆயிரத்து 670 பேர்) ஆகும். இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகள் 3.54 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.