சென்னை

டந்த 10 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு சென்னையில் இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் நல்ல மழை பெய்துள்ளது.

இம்முறை கோடைக்காலத்தில் சென்னை மக்கள் கடும் வெப்பத்தை அனுபவித்து வந்தனர்.   தண்ணீர் பஞ்சமும் மக்களை மிகவும் வாட்டியது.   சென்னைக் குடிநீர் ஆதார நீர் நிலைகள் வறண்டன.   தமிழ் நாட்டில் மற்ற இடங்களில் பெய்த அளவுக்கு சென்னையில் பெய்யாதது மக்களை கடும் துயரில் ஆழ்த்தியது.

இந்நிலையில் சென்னையில் பருவ மழை தொடங்கியது.    சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து  நகரை மட்டுமின்றி மக்கள் மனதையும் குளிர வைத்தது.   குறிப்பாக இந்த மாதம் இது வரை  வழக்கமாகப் பெய்யும் மழையை விட 53% அதிக மழை பெய்துள்ளது.    இது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஒரு நிகழ்வாகும்.

சராசரியாக செப்டம்பர் மாதம் 103 மிமீ மழை பெய்வது வழக்கமாகும்.    இந்த வருடம் இதுவரை  198 மிமீ மழை பெய்துள்ளது.    தற்போதும் மாலை வேளைகளில் மழை  பெய்து வருவதால் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 1996 ஆம் வருடம் சென்னையின் செப்டம்பர் மாத மழை அளவு 314.5 மிமீ ஆக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.