டெல்லி: நாடாளுமன்றத்தில் 2023-24ம் ஆண்டுக்கான இந்த பாராளுமன்றத்தின் இறுதி முழு  பட்ஜெட்டை தாக்கல் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்து வருகிறார். அப்போது, இது, அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட் என்று கூறினார்.  ஏற்கனவே கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது,  இந்தியா 75ல் இருந்து 100க்கு செல்வதற்கான ‘அமிர்த காலத்திற்கான’ அடிக்கல் நாட்டப்படும் என குறிப்பட்ட நிலையில், இன்றைய பட்ஜெட் அமிர்த காலத்திற்கான முதல் பட்ஜெட் என்று கூறினார்.

நிதியமைச்சர் குறிப்பிட்ட ‘amrit kaal’ என்ற வார்த்தை வேதகால ஜோதிடத்திலிருந்து வந்தது, அங்கு ‘அமிர்த கால்’ என்பது நல்ல காலத்திற்கான துவக்கமாகும். தமிழில் அமிர்தம் என்பதற்கான பொருள், சுபமானதாக கருதப்படுகிறது. ஆக்கப்பூர்வமானது, நேர்மறையானது, என்றும் அழிவில்லாதது, நீங்க நிறைவு கொடுப்பது, இன்பம் என பல்வேறு பொருள்களைக் கொடுக்கிறது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில்  முன்னதாக டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் சந்தித்தனர். பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதையடுத்து காலை 11மணி அளவில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் வாசிக்கத் தொடங்கினார்.