சென்னை: 

தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் யோக்கியதை இவ்வளவுதான் என்று, முன்னாள் தேமுதிக எம்எல்ஏவும், தற்போதைய திமுக உறுப்பினருமான சந்திரகுமார் கடுமையாக சாடி உள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. பின்னர் ஜெயலலிதா வுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியத தேமுதிக, கடந்த தேர்தலில் டெபாசிட்டை பறிகொடுத்தது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, ஒரே நேரத்தில் திமுக, அதிமுக தலைமை யிடம் பேசிய நயவஞ்சக செயலை, திமுக பொருளாளர் துரைமுருகன் அம்பலப்படுத்தினார்.

இதன் காரணமாக கடும் கோபம் அடைந்த பிரேமலாதா, திமுகவை தில்லுமுல்லு கட்சி என்றும்,  துரைமுருகனை தனிப்பட்ட முறையில் சந்தித்தோம் என்றவர், துரைமுருகனை பெரிய மனுஷனா என்றும் கடுமையாக விமர்சித்தார்.

பிரேமலதாவின் விமர்சனம் திமுகவினரிடையே கடும் கோபத்தை கிளப்பிய நிலையில்,  ஏற்கனவே தே.மு.தி.க.வில் பிரேமலதாவின் நடவடிக்கை பிடிக்காமல் அங்கிருந்து விலகிய சந்திரக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

துரைமுருகனை தனிப்பட்ட முறையில் சந்தித்தோம் என பிரேமலதாவும், அவரது கட்சி நிர்வாகிகளும் திரும்பத் திரும்ப ஒரே பொய்யை கூறி வருகின்றனர். இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது…  பத்திரிகையாளர்கள் அவர்களைப் பார்த்துவிட்டார்கள் என்பதற்காக நாங்கள் போய் பேசுவோமா? நான் என்ன முட்டாளா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆனால்,  நீங்கள் முட்டாள் கிடையாது. தமிழக மக்களைத்தான்   நீங்கள் முட்டாளாகப் பார்க்கிறீர்கள் என்று கூறியவர்,தே.மு.தி.க பிரேமலதா, சுதீஷ் ஆகியோரின் யோக்கியதை என்ன என்பதை  திமுக பொருளாளர் துரைமுருகன் நிரூபித்துவிட்டார்’ என்று கூறினார்.