ராமண்ணா வியூவ்ஸ்:
ramana
டில்லியில் ராஷ்டிரபதி பவன் வட்டாரத்தில் நன்கு தொடர்புள்ள நண்பர் இன்று போன் செய்தார். ஒரு விசயத்தைச் சொல்லி விரக்தியுடன் சிரித்தார்.
“காவிரி விவகாரத்தில் தீவிரமாக செயல்படுவதாக காண்பித்துக்கொண்டிருக்கிறது தி.மு.கழகம். மு.க. ஸ்டாலின் காவிரிக்காக போராடி கைதாகிறார், ஜனாதிபதியிடம் போய் மனு கொடுக்கிறார் கனிமொழி… அறிக்கைமேல் அறிக்கை விடுகிறார் கருணாநிதி.

பிரணாப்புடன் கனிமொழி மற்றும் திமுக எம்.பிக்கள்
பிரணாப்புடன் கனிமொழி மற்றும் திமுக எம்.பிக்கள்

இப்படியெல்லாம் செய்தால் கடந்த காலத்தில் காவிரி விவகராத்தில் தி.மு.க. செய்த தவறுகளை மறைத்துவிடலாம் என்று அக் கட்சி நினைக்கிறது. ஆனால் அவர்களுக்கு காவிரி விவகாரத்தின் மீது எந்தவித அக்கறையும் இல்லை என்பதை அவர்களது நடவடிக்கை தொடர்ந்து நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறது” என்றார். அந்த நண்பர்.
img-20161018-wa0010
“ஏன்” என்றேன்.
“காங்கிரஸூடன் இணக்கமாக இருந்து மத்திய அரசில் பங்குவகித்தபோது எவ்வளவோ செய்திருக்கலாம். கேட்ட இலாகா கிடைக்கவில்லை என்பதற்காக முரண்டு பிடித்தாரே தவிர, காவிரிக்காக ஒரு துரும்பும் அசைக்கவில்லையே கருணாநிதி” என்றார் அந்த நண்பர்.
“அது பழைய கதை.. புதிதாக ஏதோ சொல்ல வந்தீர்களே…” என்றேன்.
“ஆமாம்.. புதிய கதைதான்! காவரியில் தமிழகத்துக்குரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையில் எம்.பிக்கள் குழு, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு கொடுத்தது அல்லவா”
img-20161018-wa0009
“ஆமாம்!  பிரணாப் முகர்ஜியை சந்தித்துவிட்டு வந்த கனிமொழி, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக, பிரணாப் முகர்ஜி கூறினார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, காவிரி விவகாரம் குறித்து பேச நேரம் கேட்டுள்ளோம்; சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், அவரிடமும் வலியுறுத்துவோம். பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில், காவிரி பிரச்னையை எழுப்புவோம். தமிழக விவசாயிகளின் ஜீவாதார பிரச்னையில், யாரும் அரசியல் செய்யக்கூடாது” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தாரே” என்றேன்.
“அதேதான்! “. குடியரசுத் தலைவருக்கு அளிக்கும் மனு என்றால் அதற்கென மொழி நடை உண்டு. அதாவது வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் போன்றவர்களின் கட்டுரைகள் தனித்த மொழி நடையில் இருக்கும் அல்லவா. அது போல. ஆனால் தி.மு.க.குழு, குடியரசுத் தலைவருக்கு அளித்த மனுவில் சிறுபிள்ளைத்தனமான ஆங்கிலத்தில் அவசர கோலத்தில் எழுதிக்கொடுத்திருக்கிறார்கள்…”
“அடக்கொடுமையே..”
“அதும்டடுமல்ல.. அந்த மனுவில், “262 (ஏ) சட்டபிரிவின் கீழ் காவிரி விவகாரத்தில் பிரணாப் முகர்ஜி தலையிட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி ஓர் சட்டப்பிரிவே இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கிடையாது!”
“என்ன சொல்கிறீர்கள்..?”
“ஆமாம்! 262 (1), 262 (2).. இப்படித்தான் உண்டு.  இந்த அடிப்படை விசயத்தில் கூட அக்கறை செலுத்தாமல்தான் நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவருக்கு முக்கிய பிரச்சினைக்காக மனு கொடுத்து வந்திருக்கிறது தி.மு.க. எம்.பிக்கள் குழு!”
“ஹூம்…!”
“இந்த மனுவைப் படித்துப் பார்த்த குடியரசு தலைவர் அலுவலக அதிகாரிகள் வாயைப்பொத்திக்கொண்டு சிரிக்கிறார்கள்! “இந்த விசயம்கூட தெரியவில்லையே திமுக எம்.பிக்கள் குழுவுக்கு” என்று கிண்டலடிக்கிறார்கள்!”
“சிரிக்கமாட்டார்களா பின்னே..!”
இந்த மனு அளித்த விசயத்தை தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடு வெளியிட்டது. அதில் சட்டப்பிரிவை  206 என்று குறிப்பிட்டிருக்கிறார்களாம். அது இன்னொரு தவறு!”
“ஹய்யோ.. ஹய்யோ..”
“இதையும் கேட்டுவிட்டு தலையில் அடித்துக்கொள்ளுங்கள். ஸாரி.. கட்சிக்காரர்கள்தான் அடித்துக்கொள்ள வேண்டும்!”
“சொல்லும்..”
“குடியரசுத் தலைவருக்கு அளித்த அந்த மனுவில், முதலில் கையெழுத்திட்டவர் கனிமொழி. தலைவரின் மகள். ஆகவே அதை குறை சொல்ல தி.மு.கவில் ஏதுமில்லை. அடுத்ததாக டி.கே.எஸ். இளங்கோவனும் தொடர்ந்து ஆலந்தூர் ஆர். எஸ். பாரதியும் கடைசியாக திருச்சி சிவாவும் கையெழுத்திட்டிருக்கிறார்கள். இது கட்சிக்காரர்களை வேதனைப்படுத்தியிருக்கிறது.
திருச்சி சிவா தி.மு.க.வின் மிக மூத்த தளபதிகளில் ஒருவர். எமெர்ஜென்சி காலத்தில் சிறை சென்றவர். திருநங்கைகளுக்காக பாராளுமன்றத்தில் தனி நபர் மசோதா கொண்டுவந்த பெருமைக்குரியவர். ஆலந்தூர் ஆர். எஸ். பாரதியும் ரொம்பவே சீனியர். ஆனால் இவர்களது பெயர்களை கடைசிக்குத் தள்ளிவிட்டு   டி.கே.எஸ். இளங்கோவன் பெயரை முன்னுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.
டி.கே.எஸ். இளங்கோவன், அவரது தந்தை சீனிவாசனுடன் அ.தி.மு.க.வில் இருந்தவர். அவரது தந்தை சீனிவாசன், அதிமுக ஆட்சியில் பாடக்குழு வாரிய தலைவராக இருந்தார்.
பிறகு இளங்கோவன், ம.தி.மு.க.வுக்கு வந்தார். அங்கு கே.எஸ். ராதாகிருஷ்ணன் தயவில் தீர்மானக்குழு உறுப்பினர் பதவி பெற்றார். அடுத்ததாக தி.மு.க.வுக்கு வந்தார்.
அவர் இப்போது ஆலந்தூர் ஆர். எஸ். பாரதி, திருச்சி சிவா ஆகியோருக்கு மேலே போய்விட்டாரா என்று குமுறுகிறார்கள்  திமுக தொண்டர்கள்!”
“கையெழுத்து வாங்கும்போது, சிவா கடைசியில் போட்டிருப்பார்”
“இல்லை… முன்னதாகவே பெயர்களை டைப் அடித்து வைத்திருக்கிறார்கள். அவர்களது கணக்குப்படி டிகேஎஸ் இளங்கோவனைவிட திருச்சி சிவா ஜூனியர் போலும்!”
நண்பர் சொன்னதைக் கேட்கையில் மனதுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. சரி இதாவது கட்சி விவகாரம்….  அவர்கள் பிரச்சினை. தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினையில் தவறான சட்டப்பிரிவை குறிப்பிட்டு குடியரசு தலைவருக்கு மனு அளிக்கலாமா. இது தனிப்பட் திமுக கட்சி கொடுத்தாலும் அதனால் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும்தானே தலைக்குனிவு?