டெல்லி:

குடியுரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்நாள் ஒரு சோகமான நாள், இந்த மசோதா நிறுத்தப்படும் என்பதில் நான் முற்றிலும் தெளிவாக இருக்கிறேன் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ்  தலைவருமான ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

மத்தியஅரசு தாக்கல் செய்துள்ள குடியுரிமை சட்டதிருத்த மசோதா பாராளுமன்ற லோக்சபாவில் நிறைவேறியுள்ள நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம்,  குடியுரிமை மசோதா சட்ட நிபுணர்களின் ஆலோசனை பெறப்படாமல் உருவாக்கப்பட்டுள்ளது என்றும்இ,   மதரீதியாக துன்புறுத்தப்படுபவர்களுக்கு மட்டும் குடியுரிமை என இந்த சட்டத்திருத்தத்தில் குறிப்பிட்டிருப்பது ஏன்? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசியவர், மசோதாவில், இலங்கை, பூடான் நாடுகளை குடியுரிமை சேர்க்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியதால், மதத்தின் பெயரால் துன்புறுத்தப்படுபவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது சரியல்ல என்றும் தெரிவித்தார்.

இந்த மசோதா மூலம் மத்தியஅரசு நாடு முழுவதும் இந்துத்துவா  நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்ப தற்காக முயற்சித்து வருகிறது என்றும், மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நாள், சோகமான நாள் என்று கூறியவர், இந்த சட்டம் நிறுத்தப்படும் என்பதில் நான் முற்றிலும் தெளிவாக இருக்கிறேன் என்றும் கூறினார்.