Skip to content
  • Tue. Sep 15th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

6வது மாதம்: நாளை திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பொதுமக்களுக்கு தடை…

Sep 30, 2020

திருவண்ணாமலை: கொரோனா ஊரடங்கு அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டு உள்ளார்.  தொடர்ந்து 6வது மாதமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஞ்சபூத ஸ்தலங்களில்  அக்னி ஸ்தலமான  திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி வந்தால், புன்னியங்கள் கிடைக்கும் என்பது ஐதிகம். அதன்படி மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள்   அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் நீடித்து வருவதால், கிரிவலம் செல்லவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது, பொதுமுடக்கத்தில் இருந்து விலக்குகள் அறிவிக்கப்பட்டு, பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் கோவில்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இருந்தாலும், திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்டம் நிர்வாகம் 6வது மாதமாக தொடர்ந்து தடை விதித்து உள்ளது.

நாளை (அக்டோபர் 1ந்தேதி) பவுர்ணமி (வியாழக்கிழமை) என்பதால், ஏராளமானோர் கிரிவலம் செல்ல ஆவலாக இருந்த நிலையில், கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி  அறிவித்து உள்ளார். இது பக்தர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Post navigation

காந்தி பிறந்தநாளன்று நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிடுக! ஸ்டாலின்
அக்டோபர் 2ந்தேதி முதல் சென்னையில் இருந்து, மதுரை, தென்காசி, செங்கோட்டை, ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே

Related Post

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

தமிழ் நாடு

ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி

உலகம்

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer