கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் நீடித்து வருவதால், கிரிவலம் செல்லவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது, பொதுமுடக்கத்தில் இருந்து விலக்குகள் அறிவிக்கப்பட்டு, பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் கோவில்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இருந்தாலும், திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்டம் நிர்வாகம் 6வது மாதமாக தொடர்ந்து தடை விதித்து உள்ளது.
நாளை (அக்டோபர் 1ந்தேதி) பவுர்ணமி (வியாழக்கிழமை) என்பதால், ஏராளமானோர் கிரிவலம் செல்ல ஆவலாக இருந்த நிலையில், கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அறிவித்து உள்ளார். இது பக்தர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.