திருவண்ணாமலை,
உலகப்புகழ்பெற்ற திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு ஆன் லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இணையதள வசதியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இன்று தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. முதல் முறையாக தீபத்திருவிழாவுக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. மு
தல் முறையாக பரணி தீபத்திற்கும், மகாதீபத்திற்கும் ரூ.600 ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.