திருவண்ணாமலை:
வன்முறைக்கும் பா.ம.க.வுக்கும் சம்பந்தம் இல்லை என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்மு கத்தால் சொல்ல முடியுமா? என்று திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணா துரையை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மு.கஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், 1963 ல் திருவண்ணாமலை இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி தான் 1967ல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கான அடித்தளமாக அமைந்தது.
election campaign for dmk candidate
திருவண்ணாமலை மாவட்டம் திமுகவின் கோட்டையாக திகழ்கிறது. ஜெயலலிதாவால் கைது செய்யப்பட்டவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. அவரை அதிமுக வேட்பாளராக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும்; 18 தொகுதி இடைத்தேர்தலி லும் திமுக வெற்றி பெறும். அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய ராமதாஸ், இன்று அவரை ஆதரிக்கிறார். ஆனால், தற்போது ராமதாஸ் கட்சி வன்முறை கட்சி இல்லை என்று அதிமுகவினர் கூறுகிறார்கள்.. வன்முறைக்கும் பா.ம.கவுக்கும் சம்பந்தம் இல்லை என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தால் சொல்ல முடியுமா?
தன்னை தானே கடவுள் எனக் கூறிக்கொண்டு விளம்பரப்படுத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி. பதினைந்து வயதில் அரசியலுக்கு வந்தவன் நான்; கொலை வழக்குக்கு அஞ்சி அரசியலுக்கு வந்தவன் அல்ல.
நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை… நிர்மலாதேவி வழக்கே சாட்சி…
இவ்வாறு அவர் பேசினார்.