சென்னை: இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், “திருவள்ளுவரின் உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன்” என  திருவள்ளுவரை புகழ்ந்து பிரதமர் மோடி தமிழில் டிவிட் பதிவிட்டுள்ளார். அதுபோல சென்னையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

இன்று திருவள்ளுவர் தினம் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,  திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன், அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன. மேலும் இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். குறள் மிக நுட்பம் வாய்ந்தது என்பதை அவர்கள் உணர்வார்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

திருக்குறள் மீது ஆர்வம் கொண்ட பிரதமர் மோடி, அதுதொடர்பான பல தகவல்களை பல நிகழ்ச்சிகளில் சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். லடாக்கில் இந்தியாவின் துணிச்சலான வீரர்கள் முதல் நமது வளர்ந்து வரும் விஞ்ஞானிகள் வரை, சுதந்திர தினத்தன்று புலம்பெயர்ந்தோர் முதல் செங்கோட்டையின் கோபுரங்கள் வரை, பிரதமர் மோடி, திருவள்ளுவர் மற்றும் திருக்குறளின் கருத்துகளை மேற்கோள்காட்டி வருகிறார்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆளுநர் ரவி அவர்கள், பாரதிய முனிவர்களுள் உச்சத்தில் இருப்பவரும், தமிழர்கள் வாழும் புண்ணிய பூமியில் பிறந்தவரும் தர்மம், நீதி சாஸ்திரங்களை ஒருங்கே பெற்ற தனிச்சிறப்பு மிக்க திருக்குறளை வழங்கியவருமான திருவள்ளுவருக்கு அவரது தினத்தில் நெஞ்சார்ந்த மலர் மரியாதையை செலுத்தினார். திருக்குறள் பாரதிய கலாசாரத்தையும் நாகரிகத்தையும் வடிவமைத்து வளர்த்தது. அதன் ஆழமான போதனைகள், இன்று ஜி20 தலைவராக எழுச்சி பெறும் பாரதத்துக்கு மிகவும் பொருத்தமானவை. இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]