சென்னை:  இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் நிலையில், காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.

ஒவ்வொரு ஆண்டு தை 2-ம் நாள் மாட்டுப்பொங்கல் அன்று,   திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டும் இந்த நிலையில்,  திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் மாளிகை  வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளளார். அதில், கவர்னர் மாளிகையில் அலங்கரிக்கப்பட்ட திருவள்ளுவர் படம் இடம்பெற்றுள்ளது. இதில் எந்த விசேகம் என்றால், திருவள்ளுவர்  படம் காவி உடையில் இடம்பெற்றுள்ளது.

ஆதிகாலத்தில் திருவள்ளுவர் படம் காவி உடையில் நெற்றியில் விபூதியுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஆட்சியாளர்கள் அவரது அடையாளங்களை மறைத்து, வெள்ளை உடையுடன் படங்களை மாற்றியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இடையிடையே பாஜக தலைவர்கள் சிலர் அவ்வபோது காவி உடையணிந்த திருவள்ளுவர் பயன்படுத்தி வநத நிலையில்,  கவர்னர் மாளிகையில் உள்ள திருவள்ளுவர் படம் காவிரி உடையில் அமைந்துள்ளது.

திருவள்ளுவர் தினத்தையட்டி, அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  “இந்த திருவள்ளுவர் தினத்தில், நமது தமிழ்நாட்டின் ஆன்மிக பூமியில் பிறந்த, மதிப்பிற்குரிய கவிஞரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஞானம் நமது தேசத்தின் கருத்துக்களையும் அடையாளத்தையும் வடிவமைத்து, வளப்படுத்தி, ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் வழிகாட்டியாகவும், உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளது.

இந்த புனித நாளில், அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.