டெல்லி: திருப்பரங்குன்றம் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி திமுக ஒத்திவைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மறுத்த திமுக அரசு, அதை எதிர்த்த உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி தி.மு.க.வின் மக்களவைக்குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து விவாதம் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
Patrikai.com official YouTube Channel