சென்னை: திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கில், தலைமை செயலாளர், ஏ.டி.ஜி.பி ஆஜராக விலக்கு கோரிக்கை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம் அமர்வு, இந்த நீதிமன்ற அவமதிப்பு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும், வழக்கின் விசாரணை இன்றும் தொடரும் என்று கூறி உள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரிய மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. மேம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது தலைமைச் செயலாளர் மற்றும் ஏ.டி.ஜி.பி ஆகியோர் நேரில் ஆஜர் ஆக்குவதில் இருந்து விலக்கு வேண்டுமெனில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை நேரடியாக அணுகலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக தலைமைச்செயலாளர் டிஜிபி இன்று காணொளி காட்சி மூலம் நேரில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு, அறநிலையத் துறை, கோயில் நிர்வாகம், தர்கா நிர்வாகம் உள்ளிட்ட தரப்புகள் சார்பில் மொத்தம் 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் மூன்றாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்தன. விசாரணையின் போது இருதரப்பினரிடையே காரசாரமான வாதங்கள் நடைபெற்றன.
வக்ஃபு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முபீன், “தர்காவிற்கு சொந்தமான இடத்தில்தான் தூண் அமைந்துள்ளது. கடந்த கால நீதிமன்ற உத்தரவுகளில் ‘தீபத் தூண்’ என எங்கும் குறிப்பிடப்படவில்லை. இந்த விவகாரத்தில் சமரசத் தீர்வுக்கு தயார்” என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அரசு தரப்பின் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விகாஸ் சிங், “மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதைத்தான் மனுதாரர் ராம ரவிக்குமார் தனது மனுவில் கோரியுள்ளார். ஆனால், அவர் கேட்ட நிவாரணத்தை மீறி, தனி நீதிபதி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளார்” என்றார்.
1994 ஆம் ஆண்டு தீர்ப்பில், மேற்படி தூணிலேயே தீபம் ஏற்ற வேண்டும் எனக் குறிப்பிடப்படவில்லை என்றும், மாற்று இடத்தில் தீபம் ஏற்றுவது குறித்து பரிசீலிக்க மட்டுமே கூறப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.
மேலும், கோயில் மற்றும் தர்கா நிர்வாகங்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடலாமா? எனவும் நீதிபதிகள் கேட்டனர்.
இதற்கு மனுதாரர் தரப்பு, பேச்சுவார்த்தை வழக்கு தீர்வை தாமதப்படுத்தும் என பதிலளித்தது. அப்போது, மார்கழி மாதம் தொடங்கிவிட்டதாகவும், அடுத்த கார்த்திகை தீபத்திற்கு இன்னும் 360 நாட்களுக்கும் மேலான கால அவகாசம் உள்ளதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் தொடர்பான வழக்கு விசாரணை, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று நடைபெற்றது. வக்ஃப் வாரியம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முபீன், தீபத்தூண் அமைந்துள்ள இடம் தர்காவிற்கு சொந்தமானது என்றும், கடந்த கால நீதிமன்ற உத்தரவுகளில் “தீபத்தூண்” என எந்த குறிப்பிடுதலும் இல்லை என்றும் வாதிட்டார். இந்த விவகாரத்தில் சமரசத் தீர்வுக்கு தயாராக இருப்பதாகவும், அதற்காக ஓய்வு பெற்ற மூத்த நீதிபதியை நியமிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதிடுகையில், மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று மட்டுமே ராம ரவிக்குமார் கோவில் நிர்வாகத்திற்கு அனுப்பிய மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார். அவர் கோரிய வரம்பை மீறி, தனி நீதிபதி தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
திருப்பரங்குன்றம் விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், தனி நீதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகிக் கொண்டிருப்பதாகவும் வாதிட்டார். இதற்கு ராம ரவிக்குமார் தரப்பு கடும் ஆட்சேபம் தெரிவித்தது.
மதியம் மீண்டும் விசாரணை தொடர்ந்த நிலையில், நீதிபதிகள், “தற்போதைய சூழ்நிலையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. மேல்முறையீட்டு மனுக்கள் மீது நாளை (டிசம்பர் 17) விசாரணை தொடரும். அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், திருப்பரங்குன்றம் தீபத் தூண் சர்ச்சை தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி விசாரிப்பதற்கு எந்த தடையும் இல்லை என்றும், தற்போதைய நிலையில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்றும் தெரிவித்தனர்.
மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது தலைமைச் செயலாளர் மற்றும் ஏ.டி.ஜி.பி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டிய கட்டாயத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நீதிபதிகள் மறுத்தனர். நேரில் ஆஜர் ஆக்குவதில் இருந்து விலக்கு வேண்டுமெனில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை நேரடியாக அணுகலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
“தற்போதைய சூழ்நிலையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. மேல்முறையீட்டு மனுக்கள் மீது நாளை (டிசம்பர் 17) விசாரணை தொடரும். அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை” எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
[youtube-feed feed=1]