பச்சமுத்துவும், திருமாவளவனும்… : வி.சி.க. தோழர்கள் விவாதிப்பார்களா..

Must read

பிரபாகரன் அழகர்சாமி  அவர்களின் முகநூல் பதிவு:
சில நாட்களுக்கு முன்பு, எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவன அதிபர் பச்சமுத்து அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் தோழர் திருமாவளவன்.
அனைவருக்கும் இலவச கல்வி கிடைக்கவேண்டும் என்பது திருமாவின் கொள்கை. இருப்பதிலேயே நம்பர் ஒன் கல்வி முதலாளி பச்சமுத்து.
தீவிர ஈழ ஆதரவாளர் திருமா. ஈழமாவது கீழமாவது என்று சொல்கிறவர் பச்சமுத்து.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருப்பவர் திருமா. பாஜகவின் நிரந்தர கூட்டாளி பச்சமுத்து.
சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்கிற கொள்கைக்கு சொந்தக்காரர் திருமா. தன்னுடைய பாதுகாப்புகாக ஜாதி கட்சியை ஆரம்பித்து நடத்தி வருபவர் பச்சமுத்து.

14068308_924905314320163_3247382650885343498_n

பஞ்சமி நிலத்தை மீட்டு அதற்கு உரிய தலித் மக்களுக்கு வழங்கவேண்டும் என்கிற முழக்கத்தை தொடர்ந்து வைத்து வருபவர் திருமா. பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர் பச்சமுத்து.
இப்படி இத்தனை முரண்பாடுகள் இருக்கும்போது, பச்சமுத்துவை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் அளவுக்கு தோழர் திருமா போனதேன்?
இராமதாசிற்கும் பச்சமுத்துவுக்கும் இடையே இப்போது ஏற்பட்டிருப்பது ஏதோ கொடுக்கல் வாங்கல் தகறாரு. நாளைக்கே வேறொரு டீலிங்கில் அவர்கள் சமாதானம் ஆகிவிடுவார்கள்.
இராமதாசை எதிர்கொள்வதற்காக, எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற யுத்தியை பயன்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, பச்சமுத்து போன்றவர்களோடு நட்புப் பாராட்டுவது சரியான அனுகுமுறையா என்பதை விசிக தோழர்கள்தான் விவாதிக்கவேண்டும்!

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article