விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் ஆகஸ்ட் 17ம் தேதி ஆகும். வருடாவருடம் இந்த தினத்தில் விடுதலை சிறுத்தைகள் பிரம்மாண்டமான விழா எடுப்பது வழக்கம்.

இந்த விழாவுக்காக வியாபாரிகளிடம் வி.சி. கட்சியினர் வசூல் வேட்டை நடத்துவது குறித்து தொடர்ந்து புகார்கள் எழுகின்றன.
இந்த நிலையில் அரக்கோணம் மாதாராணி ஜவுளிக்கடை உரிமையாளரிடம் நன்கொடை கேட்டு மிரட்டி, அவரை கடுமையாக தாக்கினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர். இது அக்கடையில் உள்ள சிசி டிவி கேமராவில் பதிவானது. அந்த பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது கட்சியினரை திருமாவளவன் நல்வழிப்படுத்தக்கூடாதா என்று பலரும் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வீடியோ..
Patrikai.com official YouTube Channel