சென்னை

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திமுக அழைத்தால் தேர்தல் கூட்டணி குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.

இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம்,

”நாங்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் போட்டியிடுகிறோம். இதில் தெலுங்கானாவில் 10 இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும். 

மேலும் ஆந்திராவில் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்பாளர்களை நிறுத்த உள்ளோம். அங்குக் கூட்டணியில் இணைவதற்கான சூழல் அமையாவிட்டால் தனித்துப் போட்டியிடுவோம்.  

இதைப்போல் கர்நாடகாவில் 6 இடங்களிலும், கேரளாவில் 3 இடங்களிலும் போட்டியிட உள்ளோம்.

தேவைப்பட்டால் தமிழகத்தில் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்திப்போம். ஏற்கனவே தொகுதி பங்கீடு குறித்து திமுகவிடம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மீண்டும் திமுகவிடம் இருந்து அழைப்பு வந்தால்  பேச்சுவார்த்தை நடத்துவோம்”

என்று தெரிவித்துள்ளார்.