சென்னை

த்திய அமைச்சர் அமித்ஷாவால் டெல்லியை போல் தமிழகத்தில் விளையாட முடியாது என திருமாவளவன் கூறியுள்ளார்.

நேற்று முன் தினம் மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைநகர் டெல்லியில் நடந்ததுபோல் தமிழ்நாட்டிலும் ஆட்சிமாற்றம் நிகழும் என்று தெரிவித்தார்.

அமித்ஷாவின் பேச்சு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம்.

“ஆட்சிமாற்றம் என்பது அமித்ஷாவின் கனவாக இருக்கலாம். டெல்லியில் விளையாடியதுபோல் தமிழ்நாட்டில் விளையாட முடியாது. வட இந்தியா வேறு, தென் இந்தியா வேறு. டெல்லி வேறு, தமிழ்நாடு வேறு. தமிழ்நாடு சமூக நீதிக்கான மண் என்பது இந்தியா அறிந்த உண்மை.

ஆனாலும் தமிழ்நாட்டை டெல்லியை போல், மராட்டிய மாநிலத்தை போல் ஆக்கிவிடலாம் என்று அவர்கள் முயற்சித்து பார்க்கிறார்கள். ஆனால் அதை இந்த மண்ணில் அரசியல் முதிர்ச்சி அடைந்த தமிழ்மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.”

என்று தெரிவித்துள்ளார்.