ராஜீவ் படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக உள்ள 7 பேரின் விடுதலை குறித்து மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “ராஜீவ் படுகொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகின்றனர். ஆளுநர் அவர்களை விடுவிக்கும் முடிவை நிராகரித்து விட்டதாக வெளியான தகவல் அதிகாரப்பூர்வமானது தானா என்பது குறித்து அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும். ஒருவேளை ஆளுநர் அரசின் முடிவை நிராகரித்திருந்தால், மீண்டும் சட்டமன்றத்தை கூட்டி அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும். 2வது முறையாக அனுப்பப்படும் தீர்மானத்தை ஆளுநரால் நிராகரிக்க முடியாது என்பதால், 7 பேரும் நிச்சயம் விடுவிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.