சென்னை,

ந்துக்களின் புனிதமான  ‘திருமண், திருநீறை கிண்டல் செய்தால் பொறுக்க மாட்டோம்’ பிராமணர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்துக்களின்  ‘பாரம்பரிய திருமண், திருநீறு போன்ற சின்னங்களை கேலி, கிண்டல் செய்வதை இனி பொறுத்துக் கொள்ள மாட்டோம்’ என  அகில பாரத பிராமணர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மைலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் அகில பாரத பிராமணர் சங்க கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள், பூணூல் போராட்டம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதைத்தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில்,

இந்துக்களின் பண்பாடு, கலாசாரம் பாதுகாக்கப்பட, பாரம்பரிய திருமண், திருநீறு போன்ற சின்னங்களைக் கேலி, கிண்டல் செய்வதை, இனி பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

திருநீறு அணிந்து, அதை கிண்டல் செய்து நடிப்பதை, மீடியாக்கள் ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும்

சுவாதி கொலை வழக்கு தொடர்பான படம், வேறு எந்த பெயரிலும் வெளியிடக் கூடாது; அப்படத்தை, நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.