பா.ஜ.கவில் அதிமுக இணையும்: சிவசேனா எம்.பி. கணிப்பு!

சிவசேனா எம்.பி., ஆனந்த்ராவ் அத்சுல்

டில்லி: 

திமுக விரைவில் பாரதியஜனதா கட்சியுடன் இணையும் என, பாரதியஜனதா கூட்டணி கட்சியான சிவசேனா எம்.பி. ஒருவர் கூறி உள்ளார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து உடைந்த அதிமுக, தற்போது அதிகாரப்பூர்வமாக 3 அணிகளாக செயல்பட்டு வருகிறது. மேலும் பல அணிகளும் அவ்வப்போது உருவாகி குரல் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி மற்றும் துணைஜனாதிபதி தேர்தலில் பாரதியஜனதாவுக்கு 3 அணிகளும் போட்டிப்போட்டுக்கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தன.

மேலும், ஜெயலலிதா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்த  ஜிஎஸ்டி, உதய் போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு தற்போதைய தமிழக அரசு கையெழுத்திட்டு, மோடியின் கண்ணசைவுக்கு ஏற்ப இயங்கி வருகிறது.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தில்,  அ.தி.மு.க., விரைவில் பா.ஜ., உடன் இணையும்’ என சிவசேனா எம்.பி., ஆனந்த்ராவ் அத்சுல்  தெரிவித்தார்.

பாராளுமன்ற லோக்சபாவில் நடந்த விவாதத்தின்போது, மத்தியில் ஆளும், பா.ஜ., கூட்டணியில் உள்ள, சிவசேனாவின் ஆனந்த்ராவ் அத்சுல் கூறியதாவது,

பீகாரில் நிதிஷ்குமார் அரசு தற்போது  பா.ஜ.,வுடன் இணைந்து விட்டது. அதுபோல  தமிழகத்தில், பிளவுபட்டு உள்ள, அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்க  பாரதியஜனதா விரும்புகிறது. அதைத்தொடர்ந்து  இரு அணிகளும் (ஓபிஎஸ் – இபிஎஸ்)  விரைவில், பா.ஜ., வுடன் இணைந்துவிடும் என்று கூறினார். மேலும்,  ஒரே சித்தாந்தம், ஒரே தலைவர் என்பதை நான் ஆதரிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
English Summary
AIADMK 2 teams will join BJP: Shiv Sena MP Projection!