சென்னை: தமிழ்ஆர்வலர்கள் எதிர்ப்பு எதிரொலியாக டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டத்திட்டத்தில் மீண்டும் திருக்குறள் சேர்க்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் சமீபத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், குரூப்-4, குரூப்-2, குரூப்-1 உள்ளிட்ட பலவகையான தேர்வுகளில் என்னென்ன பாடதிட்டங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த தேர்வுகளுக்கான மாதிரி கேள்விகளும் வெளியிடப்பட்டன. இதில், ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த திருக்குறள் பாடத்திட்ட பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில் திருக்குறள் பாடத்திட்டம் இடம்பெற்றிருந்த நிலையில், தமிழ், தமிழ் என்று பேசும் திமுக அரசில் உலக பொதுமறையான திருக்குறள் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

திருக்குறள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருப்பiத தமிழார்வலர்கள்  கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதையடுத்து,  தற்போது தமிழ் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு பாடத்திட்டத்தில் மீண்டும் திருக்குறளை சேர்த்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும்,பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கட்டாய தமிழ் மொழித் தகுதி தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான தேர்வுத் திட்டம், பாடத்திட்டம் உள்ளிட்டவை https://www.tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.