ப்போ வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர்னு சோசியலு மீடியா முழுக்க, மு.க. ஸ்டாலினோட “ஈனப்பெருஞ்சுவர்” போஸ்டர்தான் ஓடிக்கிட்டிருக்கு. ஆளாளுக்கு கலாய்க்கிறாங்க.

இந்த போஸ்டரை பார்த்தவுடனே ஒரு சந்தேகம். ஒருவேளை ஃபோட்டோ ஷாப் வேலையா இருக்குமோன்னு!

டிஜிட்டல் ஆர்ட்டிஸ்டுங் நாலஞ்சு பேருகிட்ட கேட்டேன். அவங்க, “இது ஒரிஜினல்தாம்பா”னு சொன்னாங்க.

இந்த போஸ்டர்லயே நாலஞ்சு கட்சிக்காரங்க சேர்ந்துதான் மு.க. ஸ்டாலினை “வாழ்த்தியிருக்காங்க”. அந்த நாலஞ்சு  கட்சிக்காரங்களுக்கு தெரிஞ்ச இன்னும் நாலஞ்சு பேரு, இந்த போஸ்டர் வாசகங்களை பார்த்திருப்பாங்க.. அத்தனை பேருமா இதைக் கவனிக்காம இருப்பாங்கன்னு அடுத்த சந்தேகம் வந்துச்சு.

பட்.. அதுக்கு வாய்ப்பு இருக்கு. அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே!

போவட்டும்.

மூணாவது சந்தேகம்… அந்த போஸ்டரை அடிச்ச பிரிண்டிங் பிரஸ் மேல வந்துச்சு.

என்னதான் தப்பான வாசகத்தோட ஒருத்தர் வந்து கொடுத்தாலும், அதை சரி செய்ய வேண்டியது  அந்த பிரஸ் ஓனரோட கடமைதானே. தவிர, இதே மாதிரி பல கட்சி போஸ்டர்களிலும் நடந்திருக்குதே.. இந்த பிரிண்டிங் ஆளுங்க என்னதான்  பண்றாங்க..?

சரின்னு.. அந்த பிரிண்டிங் (லித்தோ) பிரஸ்ஸுக்கு போன்போட்டேன்.

ஆமா.. அந்த “ஈனப்பெருஞ்சுவர்” போஸ்டரை அடிச்ச சென்னை ரெட்ஹில்ஸ்ல இருக்கிற அம்மன் லித்தோஸூக்குத்தான்!

ரிங்  போட்டு ரொம்ப நேரம் கழிச்சுதான் அந்தப்பக்கம் எடுத்து “அலோ..” அப்படின்னு குரலு கேட்டுச்சு.

நான், “வணக்கமுங்க…ரெட்ஹில்ஸ் அம்மன் லித்தோஸ்தானுங்களே.” அப்படின்னேன்.

ஆமாம்.. சொல்லுங்க சார்..”

“பேசுறது ஓனருங்களா..”

“ ஓனர் ஏழுமலைதான் பேசுறேன்..”

“சரிங்க.. நமக்கு ஒரு போஸ்டர் ஒண்ணு அடிக்கணும்..  எட்டுக்கு ஆறு சைஸு..!” (நாமதான் துப்பறியும் சர்னலிஸ்ட் ஆச்சே.. அதனால, கஸ்டமர் மாதிரி பேச முடிவு பண்ணேன்!)

“எட்டுக்கு ஆறு வராது சார்.  மூணுக்கு ரெண்டுதான் வரும். சிங்கிள் பிட்டு!”

“ஹி ஹி.. . சரி சார். “கலருக்கு ஆயிரம் காப்பி எவ்வளவு ஆகுது சார்..”

“6500 சார். டிசைனுக்கு தனி ரேட்..”

“சரி சார்… அப்புறம்.. “கொஞ்சம் பர்பெக்டா பண்ணிக்கொடுங்க சார்.. ஈனப்பெருஞ்சுவரேனு ஸ்டாலின் போஸ்டரு  அடிச்சது நீங்க தானே… எங்கப்பாத்தாலும் அதுபத்தித்தான் சார் பேச்சா இருக்கு..”

“தனிப்பட்ட முறையில நாமளா பண்றதில்ல சார்.. கஸ்டமரு எழுதிக்கொண்டு வர்றதை நாங்க அடிச்சுத்தர்றோம். இதுவும் அப்படித்தான்!”

“ஓ.. ஆனாலும் நீங்களும் கொஞ்சம் கவனிச்சிருக்கலாமே சார்”

“சார்.. “நானா பிரிண்ட் பண்ணி என்னுடைய போட்டோவோ, கடைப்பெயரோ போட்டுகிட்டா  என்னோட தப்பு. கஸ்டமர் கொடுத்ததைத்தானே பிரிண்ட் போட்டுத்தர்றோம்..”

“அதுவும் சரிதான்!”

“யாரோ..  சிம்சோனா சம்சனோ.. அவர்தான் கொடுத்தாரு.. அவரு பேரு, போட்டோ கூட அந்த போஸ்டர்ல இருக்குமே…!”

“ஆமா சார்..சிம்சோன். அவரு போட்டோ இருக்கு..”

“ஆமாங்க. . அவங்களே  எழுதி எடுத்திட்டு வந்து கொடுத்தாங்க… . டிசைன் பண்ணவுடனே அவங்களே செக் பண்ணாங்க.. ”

“சரிதான் சார்.. ஆனா.. நீங்களும் கொஞ்சம் எழுத்துப்பிழைகளை பார்த்துக்குங்க சார்”

“நீங்க எழுதி கொண்டு வர்றதைத்தானே நாம பிரிண்ட் பண்ண முடியும்.. என்ன மேட்டர் கொண்டுவர்றீங்களோ, அதை ஃபர்பெக்டா அடிச்சுக்கொடுத்துருவோம். அதான் எங்க வேலை..!”

“ஆமாமா.. நீங்க  பல வேலைகள்ல இருக்கீங்க.. அதனால சீனப்பெருஞ்சவர் மாதிரி ஈனப்பெருஞ்சுவர்னு ஒண்ணு இருக்கு போலருக்குண்னு நினெச்சிருப்பீங்க..”

”அட.. அவரே  எழுதிக்கொண்டு வந்தாருங்க.. டிசை பண்ணி  சாம்பிள் பீஸ் கொடுத்தோம். .. அதையும் பார்த்து ஓகே பண்ணாரு.. நாங்க என்ன பண்ண முடியும்…”

“ஆமாமாம்..”

“உங்களுக்கு என்ன ஆயிரம் காப்பியா.. “

“ஆமாங்க சார்..!”

“சிறப்பா பண்ணிக்கொடுத்துருவோம்.. வாங்க..”

# அது சரி!