இப்படி சொன்னாலும் சொல்வார்கள்..

  • ஏழுமலை வெங்கடேசன்

மர்சியல் சிலிண்டர் விலை உயர்வு டீக்கடைகளில் வெட்டிப்பேச்சு கூட்டத்தை குறைக்கும்..

ஓட்டலுக்கு அடிமையாக பட்டுக்கிடக்கும் ஆண்களின் ஆணவத்தை ஒழித்து வீடே கதியெனக் கிடக்கச்செய்யும்..

“வீட்டு சிலிண்டர் விலையையும் ஏற்றுகிறீர்களே..?”

அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு சாப்பிட்டு ஒபிசிட்டி பெரிய பிரச்சினையாக மாறி கொண்டிருக்கிறது.. அதனை கட்டுப்படுத்தத்தான்..

நன்றாக கவனியுங்கள், சுங்க கட்டணத்தை உயர்த்தி இன்னொரு பக்கம் தினமும் டீசலை கூட்டிக் கொண்டே வந்தால் என்ன ஆகும்? காய்கறி மளிகை பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து கொண்டே போகும் அப்போது சிக்கனமாய் அவற்றை வாங்கி பயன்படுத்துவதில் பொதுமக்களுக்கு பொறுப்புணர்வு வரும்.

“சாப்பாடு விஷயத்தை விடுங்கள். சரக்கு போக்குவரத்து பக்கம் அதிகமாக கைவைத்தால் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடுவென ஏறுமே? வீடு கட்டும் ஏழை எளிய மக்களின் கனவு தகர்ந்து போகுமே..?”

கையில் காசு இல்லாமல் வங்கியிலோ வேறு எங்கோ கடனை வாங்கி கட்டினால் மாதந்தோறும் வட்டி கட்டியே சாக வேண்டும். அது மட்டுமில்லாம ஆறு மாதத்திற்கு ஒருமுறை சொத்துவரி , பாதாள சாக்கடை குழாய் வரி என ஏகப்பட்ட இம்சைகள்.. வாடகை வீட்டிலேயே இருந்து விட்டால் இந்த தொல்லைகள் எல்லாம் கிடையாது.