டெல்லி: மோடி அரசு மத்திய அரசு மத அரசியல் செய்கிறது; ஏழைகளை பற்றி கவலைப்படுவது இல்லை என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் காட்டமாக விமர்சித்துள்ளார்.
முன்னாள் மத்தியஅமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கபில்சில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, மதவாத அரசியல் மட்டுமே செய்து வருகிறது. ஏழைகள் பற்றி கவலை கொள்வதில்லை எனவும், எரிபொருட்களின விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால், ஏழைகளின் வருமானம் உயர்ந்து இருப்பதாக பாஜக கூறி வருகிறது. ஒருவர் மாதம் ஒன்றிக்கு 6ஆயிரம் சம்பாதித்த நிலையில், தற்போது மாதம் இருபத்தைந்தாயிரம் சம்பாதிப்பதாக பாஜக தலைவர்கள் கூறி வருகின்னர்.
இதைர மிகவும் கொடூரமான ஒரு காமெடி என்று கூறியவர், ஒருவேளை பாஜக மற்றும் அந்த கட்சியை சார்ந்த தலைவர்களின் வருமானம் உயர்ந்திருக்கக்கூடும், ஆனால், பொதுமக்களின் வருமானம் உயரவில்லை, மாறாக எரிபொருள் விலையும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் தான் உயர்ந்து வருகிறது, பாஜக தலைவர்கள் உண்மையான உலகத்தில் இல்லை என குற்றம் சாட்டினார்.
மேலும், பிரியங்கா காந்தி வதேரா ஏற்கனவே உ.பி.யில் காங்கிரஸுக்கு இழந்த இடத்தைக் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். அதை கோரக்பூரில் நடந்த காங்கிரஸ் பிரதிக்யா பேரணியில் பேசிய பிரியங்கா இக்கட்டான காலங்களில் மக்களுடன் காங்கிரஸ் மட்டுமே துணை நிற்கும் என தெளிவுபடுத்தி இருக்கிறார் என்று கூறியவர், பாஜக அரசை மக்கள் விரைவில் தூக்கி எறிவார்கள், அதற்கான அச்சாரம் உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் தொடங்கும் என்றும், தனதுக்கு அதன்மீது நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார்.