சென்னை:
தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் முடிவடைந்து 15 நாட்களுக்கு மேலாகி யும் வெயிலின் தாக்கம் குறைந்த பாடில்லை. அதிகரித்து வெயில் காரணமாக நீர் நிலைகளும் வறண்டு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது.
இந்த நிலையில் சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் , விழுப்புரம் , அரியலூர் , பெரம்பலூர் உள்பட 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
சென்னையில் 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என்று தெரிவித்துள்ள வானிலை மையம், நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.