மாயிலாடுதுறை:
ளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள் அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்பு தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் பங்கேற்க ஆளுனர் சென்ற போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னம்பந்தல் அருகே பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் கண்டன முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் கடந்து சென்ற பின்பு சிலர் சாலையில் கருப்பு கொடிகளை வீசி எறிந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து மன்னம்பந்தலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது .

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறுகையில், ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. ஆளுநரின் கான்வாய் கடந்துசென்ற பிறகே, போராட்டக்காரர்கள் பிளாஸ்டிக் பைப்புகளில் கட்டப்பட்டிருந்த கறுப்புக் கொடிகளை வீசினர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புகள் அமைத்து கட்டுக்குள் வைத்திருந்ததாகவும், கைது செய்து வாகனத்தில் ஏற்றியதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.