சென்னை:
வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொழில் நிறுவன ஊழியர்களுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும், கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் தகரம் அடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பிற மாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்துதல் கிடையாது எனவும், தனிமைப்படுத்துதலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோர் அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.