தூத்துக்குடியில்  முழு ஊரடங்கு கிடையாது… மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

Must read

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு இனிமேல் அமல்படுத்தப்படாது  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில்,  கொரோனா இல்லாத தூத்துக்குடி சார்பில் இன்று 5000 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  தூத்துக்குடி கீழ சண்முகபுரத்தில் வானவில் ஸ்டோர் அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.  முதல் கட்டமாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சண்முகபுரம் பகுதியில் சுமார் 5000 பேருக்கு இன்று வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், இந்தியன் ஆபீஸர்ஸ் கிளப் செயலாளர் அந்தோணிராஜ், வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல், ஜெயபால், இசையமைப்பாளர் சீலன் ஸ்ருதி பொன்.முருகன், பத்திரிகையாளர் செ.ஜெகஜீவன் மற்றும் தன்னார்வலர்கள் வக்கீல் சசிக்குமார், சங்கர், மணிமாறன், வினோத், பீர் முகம்மது நியாஸ், செல்வபாரதி, அமீர், அசோக், ஆல் கேன் செந்தில்குமார் பாலா உட்பட பலர் க‌லந்து கொன்ட‌னர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர்,  தூத்துக்குடியில் தற்போதைக்கு முழு ஊரடங்கு இல்லை
 தமிழக முதல்வர் அறிவித்தால் மட்டுமே முழு ஊரங்கு என்று தெளிவுபடுத்தினார்.

More articles

Latest article