இயந்திரங்களை பழுதாக்கி வரும் இங்குள்ள கற்களுக்கு கூட இறக்கமில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயதுடைய சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. சுர்ஜித் மீட்பு பணிகள் குறித்து பார்வையிட வந்த வைகோ, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் அதுகுறித்து கேட்டறிந்தார்.  மேலும் சுர்ஜித்தின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “2 வயதான குழந்தை மூச்சுத்தினறி, பசி ஏற்பட்டு, தாகம் ஏற்பட்டு ஒவ்வொரு நொடியும் மரண வேதனையை அனுபவித்திருப்பதை நினைக்கும் போது நெஞ்சு வெடிக்கிறது. பிரிட்டோ ஆரோக்யராஜ், கலா மேரியின் 2வது பிள்ளை. அந்த பகுதியில் ஓடி விளையாடிய இடத்திலே 2 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குழி. குழி தோண்டுபவர்கள் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், அதை மூடாமல் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தான ஒன்று.

அரசு தன்னாலான முயற்சிகளை செய்து வருகிறது. அமைச்சர்கள், அதிகாரிகள், மாவட்ட ஆட்சி தலைவர், காவல்துறையினர் என அத்தனை துறை அதிகாரிகளும் 4 நாட்களாக இங்கேயே இருக்கிறார். சகோதரி ஜோதிமணியும் இங்கேயே இருக்கிறார். விஜயபாஸ்கர் அவர்கள், ஒவ்வொரு முயற்சியும் ஒரு கட்டத்தில் சரிவை ஏற்பட்டுவிட்டது. எங்கெங்கிருந்தெல்லாம் இயந்திரங்களை வரவைக்க முடியோமு அங்கிருந்தெல்லாம் அவர் வரவழைத்தார். முதலில் 25 அடி உயரத்தில் இருக்கிறான் என்று நினைக்கும் போது 70 அடிக்கு போய்விட்டான். இப்போது 72 மணி நேரம் கடந்துவிட்டது. அரசுக்கு ஒரு திட்டவட்டமான தொழில் நுணுக்கம் வேண்டும். அதற்குறிய கருவிகள் வேண்டும்.

மத்திய பேரிடர் மேலாண்மை அமைப்பும், மாநில அமைப்பும் இங்கு வேலை செய்கின்றனர். நிலவுக்கு செல்ல முடிகிறது, அங்கு மனிதனை நடக்க வைக்க முடிகிறது. செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்ப முடிகிறது. ஆனால் ஒரு குழந்தை இவ்வாறு சிக்கியுள்ள போது, அதற்கான இயந்திரத்தை கண்டுபிடிக்க இயலவில்லை. இது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. 72 மணி நேரம் ஆகிறது. அக்குழந்தையின் தாய் மற்றும் தந்தையினை நிலையையும், குடும்பத்தினரின் நிலையையும் நினைத்து பார்க்க இயலவில்லை.

கல்லுக்கு இரக்கம் இல்லை. ஆம், இங்கிருக்கும் கல் கூட கருவிகளை பழுதடைய செய்கின்றன. மனித முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. இன்னும் நம்பிக்கையோடு மேற்கொள்கிறார்கள். மாநில அல்லது மத்திய அரசாகட்டும், இதுபோன்ற விபத்துக்களில் சிக்குவோரை உயிரோடு காப்பாற்றும் தொழில் இயந்திரத்தை அத்தனை இடங்களிலும் அறிமுகப்படுத்து வேண்டும். மக்கள் கண்ணீரோடு, வானமும் சேர்ந்து அழுகிறது” என்று தெரிவித்தார்.