டெல்லி: தமிழ்நாட்டில் 572 கிராமங்களில் 4ஜி சேவை இல்லை என்றும், நாடு முழுவதும் இதுவரை 45,000 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், 4ஜி சேவை குறித்து உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்தியஅமைச்சர் பதில் அளித்தார்.
அப்போது, நாட்டில் 93 சதவீதம் கிராமங்களுக்கு 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது எனவும் , 45,000 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 572 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.