முதல்வர், அமைச்சர்களுக்கு வருமானவரித்துறை குறி: தமிழகத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு?

Must read

 

சென்னை:

அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமானவரி சோதனை நடந்ததை அடுத்து இதர அமைச்சர்கள் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரையும் வருமானவரித்துறையினர் குறிவைத்திருப்பதாகவும் இதையடுத்து தமிழக அரசை டிஸ்மிஸ் செய்யும் முடிவில் மத்திய பாஜக அரசு இருப்பதாகவும் ஒரு தகவல் பரவியுள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது:

சர்ச்சைக்குரிய தொழிலதிபர் சேகர் ரெட்டி, முன்னாள் தமிழக தலைமைச் செயலாலற் ராம மோகன ராவ் ஆகியோரில் ஆரம்பித்து அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் வரை சிலர் சமீபத்தில் வருமானவரி ரெய்டுக்கு ஆளானார்கள். இவர்களுக்கு  நெருக்கமானவர்களையும் குறிவைத்து அவர்களது பணப்போக்குவரத்துக்களை விசாரித்த வருமானவரித்துறை இது குறுத்து பல தகவல்களை திரட்டியுள்ளது.

மேலும் தமிழக முதலமுதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் 29 பேரும் சோதனை  பட்டியலில் இருக்கிறார்கள். மேலும், ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லத்திலும்  விரைவில் வருமானவரித் துறை, மத்திய போலீஸ் பாதுகாப்புப் படையோடு  சோதனை நடத்த உள்ளது.

அதோடு, தினகரன், திவாகரன், நடராஜன், விவேக் வீடுகளிலும் சோதனை நடத்தப்படும்.

முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டால், இதை வைத்தே தமிழக அரசை கலைக்க மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. ஆகவே விரைவில் தமிழகத்தில் பொதுத்தேர்தள் வர இருக்கிறது” என்று ஒரு செய்தி உலவி வருகிறது.

இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

More articles

Latest article