
லண்டன்
பிரிட்டனில் தற்போதைய தேர்தல் முடிவின் படி பெண் எம் பி க்களின் எண்ணிக்கை 196லிருந்து 200 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று பிரிட்டனில் தேர்தல் நடந்தது தெரிந்ததே.
அதன் முடிவுகளில் 200 பெண் எம். பி; க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சென்ற தேர்தலில் 196 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த எண்ணிக்கை தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்துக் கொண்டிருப்பதை பிரிட்டனில் உள்ள மக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.
பிரிட்டனின் முதல் பெண் எம். பி. நான்சி ஆச்டோர், 1919ல் பதவி ஏற்றார்.
இவர் பதவி ஏற்று 104 ஆண்டுகள் கழித்து இது போல் சாதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel