லண்டன்,

பிரிட்டனில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு பாராளுமன்றம் அமைந்துள்ளது.

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நேற்று முடிவடைந்த நிலையில்,வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த தேர்தலில்பி ரதமர் தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடுமையான  போட்டி நிலவியது.

ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையின்போது, தொழிலாளர் கட்சி முன்னிலையில் இருந்தது. ஆனால், நேரம் ஆக ஆக கன்சர்வேடிவ் கட்சி முன்னிலை பெற்றது. இறுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி தொழிலாளர் கட்சியை விட சுமார் 50 இடங்களை அதிகம் பெற்றுள்ளது.

தேர்தல் நடைபெற்ற  650 இடங்களில் 645 இடங்களுக்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.

இதில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 314 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சி 260 இடங்களை பிடித்துள்ளது. இன்னும் 5 இடங்களின் முடிவுகள் தான் மீதமுள்ளது.

மெஜாரிட்டி பெறுவதற்கு 326 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் சூழ்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சி 314 இடங்களை மட்டுமே பெற்றுள்ளதால் மெஜாரிட்டையை இழந்துள்ளது.

இதன் காரணமாக பிரதமர் தெரசாமே பதவியில் நீடிப்பது இழுபறியான நிலையில் உள்ளது.  ஆட்சி அமைக்க மற்ற சிறிய கட்சிகளின் ஆதரவை பெற வேண்டிய கட்டாயத்தில் தெரசா மே உள்ளார்..

இதன் காரணமாக  பிரிட்டனில் தொங்கு பாராளுமன்றம் ஏற்படுவது உறுதியாகியுள்ளது.

650 தொகுதிகளின் வெற்றி நிலவரம்:-

கன்சர்வேட்டிவ் கட்சி – 314

தொழிலாளர் கட்சி  – 261

ஸ்காட்லாந்து தேசியவாத கட்சி – 35

லிபரல் ஜனநாயக கட்சி – 12

 ஜனநாயக ஒற்றுமைவாத கட்சி 10

மற்றவை  – 13

முடிவு தெரியாதவை – 5