மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக  மும்பை பெருநகர மேயர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் தொற்று பரவல் உச்சமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 55,469 பேருக்குப் பாதிப்பு உறுதியானது. இதுவரை   56,330 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.   தற்போது 4,72,283 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதன் காரணமாக அங்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 82 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மும்பையில், இதுவரை 1,76ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மீதமுள்ளவர்களுக்கு போட தேவையான தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாகவும், உடியாக தேவையான தடுப்பூசி மருந்துகளை உடனே அனுப்ப வேண்டும் என  மும்பை பெருநகர மேயர் கிஷோரி பெட்நேகர் தெரிவித்துள்ளார்.
செவிலியரான மேயர் கிஷோரி பெட்நேகர் கடந்த ஆண்டு கோரோனா தொற்று தீவிரமடைந்தபோது, மீண்டும் செவிலியராக மாறி சேவை செய்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில்  மாநிலத்தில் தடுப்பூசி அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டுமே உள்ளன. அதிகமான தடுப்பூசிகளை அனுப்புமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளதாக மாநில அரசு தெரிவித்து உள்ளார். கையிருப்பபில்  14 லட்சம் டோஸ் மட்டுமே உள்ளதாக தெரிவித்தவர், தினசரி 5 லட்சம் டோஸ் தடுப்பூசி  செலுத்தப்படுகிறது என்றும்,  பல மையங்களில் போதிய தடுப்பூசி இல்லாததால், தற்காலிகமாக அவை மூடப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்துக்கு  ஒவ்வொரு வாரமும் எங்களுக்கு 40 லட்சம் டோஸ் தேவைப்படுகிறது என்றவர், தங்களுக்கு தேவையான தடுப்பூசி மருந்தை உடனே அனுப்பி வைக்க வேண்டும் என முதல்வர் உத்தவ்தாக்கரே பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
[youtube-feed feed=1]