தேனி: லண்டனில் இருந்து தேனி வந்த பொறியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவுவது கண்டுடிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரசானது சாதாரண கொரோனாவை விட 70 சதவீதம் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆகையால் இங்கிலாந்துடனான அனைத்து விமான சேவைகளையும் இந்தியா முற்றிலும் ரத்து செய்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா தொடர்பான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கவிடப்பட்டு உள்ளன. இந் நிலையில் லண்டனில் இருந்து தேனி வந்த பொறியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் அவருக்கு புதியவகை கொரோனா பரவியுள்ளதா என்பது குறித்து ஆராய வேண்டி உள்ளது. அதற்காக வைரஸ் உறுதி செய்யப்பட்டவரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அதன் முடிவுகள் பொறுத்தே அவருக்கு உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதா என்பது தெரியவரும்.