விஜய் டிவி நாடகத்தை தடை செய்ய வேண்டும்!

Must read

நெட்டிசன் பகுதி:

அருணாசலம் இளஞாயிறு ( Arunachalam Elagnairu) அவர்களின் முகநூல் பதிவு:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், ” தெய்வம் தந்த வீடு” நாடகத்தை  இன்று எதேச்சையாக பார்த்தேன்.  கடும் அதிர்ச்சிக்குள்ளானேன்.
ஒரு தாய் தன் மகளுக்கும், வினோதினிக்கும் போனில் ஒரு ஆலோசனை சொல்கிறார்..  சீதாவின் வயிற்றில் உள்ள கருவைக்கலைக்க முதலில் மாமியார் அறைமுன் சமையல் எண்ணெய்யை ஊ்ற்றச்சொல்கிறார்.   மாமியார் வழுக்கி விழுவார்.. அதற்கு சீதாவின் கருவே காரணம் எனக்கூறி, கருவை களைக்க வைக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். சீதா பார்த்து எண்ணெய்யை துடைத்து விட்டதால் அந்த முயற்சி தோல்வியுறுகிறது..

a

அடுத்த முயற்சியாக …  சீதாவின் கணவர் ராமு அறைமுன் சோப் ஆஇஸை ஊற்றினால் ராமு வழுக்கி விழுவார்.. அதற்கு காரணம் சீதாவின் வயிற்றில் வளரும் குழந்தையே காரணம் எனக்கூறி, கருவை கலைக்கவைக்கலாம் என ஆலோசனை கூற இந்த இரண்டு பேரும் அதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள்..!
மேற்கண்ட நாடகம் முழுவதுமே சீதா என்ற பெண்ணிற்கு எப்படி துரோகம் செய்வது,  மாமியாரை, மாமனாரை, குடும்பத்தில் உள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது, திருடுவது, போன்ற தீய செயல்களை செய்பவர்களாகவே காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நாடகத்தை பார்க்கும் லட்சக்கணக்கான பெண்களின் மனதில் நாமும் இப்படி செய்து பார்த்தால் என்ற எண்ணத்தை  ஆழமாக பதிக்கிறார்கள்… எனவே இந்த நாடகத்தையும், இது போன்ற பிற நாடகங்களையும் தடைசெய்யவேண்டும்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article