சென்னை: செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு; 50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பு குறித்து, கொரோனா நோய்க் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்து ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, தற்போதுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்கி தமிழக அரசு அறிவித்து உள்ளது.
அதன்படி, இரவு 10 மணி வரை கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்களை திறக்க அனுமதி 23ம் தேதியில் இருந்து புதிய தளர்வுகள் அமலுக்கு வருகிறது.
செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கலாம். முதல்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் சுழற்சி முறையில் செயல்பட அனுமதி /
50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கடற்கரைக்கு செல்லவும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.