டிகர் சூர்யா, அபர்ணா நடித்திருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா டைரக்டு செய்திருக்கிறார். கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் இப்படம் வெளியாகாமல் முடங்கி இருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் படம் வெளி யாகும் என்று எதிர்பார்ர்கும் நிலையில் சூரரைப்போற்று ரிலீஸுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால் படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர் உரிமை யாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.

இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.பன்னீர் செல்வம், ‘சூர்யா மற்றும் அவரது குடும்ப உறுப்பி னர்களின் படங்களை திரையரங்குகளில் வெளியிட வேண்டாம்’ என்று முடிவு செய்துள்ளோம் என தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’. படம் ஒடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்யப் பட்டது. அதற்கு தியேட்டர் அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. அதையும் மீறி அப்படம் ஒடிடியில் ரிலீஸ் செய்யப் பட்டது. அதன் காரணமாக தற்போது தியேட்டர் அதிபர்கள் சூர்யாவின் சூரரைப் போற்று படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில், ’சூர்யா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் படங்களை வெளியிடுவது குறித்த இறுதி முடிவு சங்க உறுப்பினர்களுக்கிடையேயான சந்திப்புக்குப் பிறகுதான் எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார் பிரபல விநியோ கஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம்.
 
 

[youtube-feed feed=1]