ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார் ஹரிகுமார். ‘தேள்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார்.

இப்படத்துக்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

இதற்காக ஒரு பிரத்யேக போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படம் வரும் டிசம்பர் 10 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.