சிட்னி:
ஒரே ஒரு என்ஜின் கொண்ட சிறு விமானம் மூலம் உலகைத் தனியாக சுற்றி வந்த சாதனை படைத்திருக்கிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர்.
பதினெட்டு வயதான ஆஸ்திரேலிய இளைஞர் லேக்லான் ஸ்மார்ட், ஒரே ஒரு என்ஜின் கொண்ட விமானத்தில் உலகை வலம் வந்திருக்கிறார்.
15 நாடுகளில் 24 விமானத்தளங்களில் இறங்கி, இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் ஸ்மார்ட். இதற்கு இரண்டு மாத காலம் ஆகியிருக்கிறது.
பயணத்தை தொடங்கிய குயின்ஸ்லேண்ட் விமானத் தளத்திலேயே அதனை நிறைவு செய்தார்.
இதே போன்ற சாதனையை ஏற்கெனவே செய்த அமெரிக்கரைவிட ஸ்மார்ட்டுக்கு ஒரு வயது குறைவு. ஆகவே ஒற்றை எஞ்சின் விமானத்தில் உலகை சுற்றிய மிக இளவயதுக்காரர் என்ற பெருமையை ஸ்மார்ட் பெறுகிறார்.
“ஒற்றை என்ஜின் விமானத்தில் பறப்பது ஆபத்தான ஒன்று பலர் சொன்னார்கள். ஆனாலும் துணிகரமான இந்த பயணத்தை தைரியமாக மேற்கொண்டேன். த்ரில்லான அனுபவம் இது. இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று கூறினார் ஸ்மார்ட்.